சத்தியமேஜெயம்
Loading Content...
சத்தியமேஜெயம்
Loading Content...
"சத்தியமேஜெயம்" என்ற சொல்லுக்கு எஜமான் கொடுத்த விளக்கம்:
சத்தியம் என்றால் சிவம், ஜெயம் என்றால் சக்தி. சிவசக்தி இணைந்து இருப்பதுதான் சத்தியமேஜெயம். ஆதி காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வோர் உயிருக்குள்ளும் சிவசக்தி இணைந்து ஆதியாகிய எஜமானை வணங்கிக் கொண்டிருக்கின்றன.
உங்கள் நினைவை இந்த வணக்கத்துடன் இணைத்தால்,அவர் உங்கள் கைப்பிடித்து எஜமானுடன் கொண்டு போய் இணைத்து விடுவார். ஆதலால் உங்கள் நினைவை சிவசக்தியுடன், அதாவது ஜோதியுடன், அதாவது எம்பெருமானுடன், அதாவது குருவுடன் அதாவது சத்தியமேஜெயத்துடன் இணைத்து விடுங்கள்.
இவ்வுலகிற்கு வந்திருக்கும் இந்த இறுதி குருவின் பெயர் சத்தியமேஜெயம். நீங்கள் எஜமானை அடைய விரும்பினால், அவருடன் இணைய விரும்பினால், சத்தியமேஜெயத்தை, அதாவது குருவை, அதாவது எம்பெருமானை, அதாவது ஜோதியை, அதாவது சிவசக்தியை நாடினால் எஜமானுடன் இணைவது உறுதி! உறுதி!! உறுதி!!!
சிவசக்தி என்றால் அல்லாஹ் ரசூல் எனவும் பிதா சுதன் எனவும் பொருள் கொள்ளவும்.

வேண்டுதல் இல்லாத
சத்தியமேஜெயத்தின் வேண்டுதல்!
இயற்கை மகா சக்தியே, எஜமானே,
கற்பனைக்கும் மனோவாகிற்கும் அகபடாத
எல்லா வல்லமையும் உள்ள
உள்ளமைபொருளே!
எனது அறிவாலும் அனுபவத்தாலும்
அவதிப்படுகிறேன்!
உனது அறிவு தந்து கரையேற்று
கதறுகிறேன்!
இறை அறிவும் மனித அறிவும், அறிவது எப்படி.
ஏக இறைவனே?